படி1 :இரட்டைகிளி கவுனி அரிசியைக் கழுவி நீரில் 10-12 மணி நேரம் ஊறவைக்கவும்.
படி2 :12 மணி நேரத்திற்கு பிறகு அரிசியை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்
படி3 :1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் வைத்து குறைந்த தீயில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்
படி 4: அரிசி நன்கு வெந்ததும் , அதில் துருவிய தேங்காய் , நாட்டுசர்க்கரை, ஏலக்காய்தூள், நெய் சேர்த்து கிளறிவிடவும்.
படி 5: சர்க்கரை சேர்த்ததும் அரிசி இளகி விடும் , அது நன்கு கெட்டிப்படும் வரை 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவைக்கவும்.
படி 6 : அற்புதமான சுவை கொண்ட , சத்து நிறைந்த இனிப்பு கவுனி அரிசியை உண்டு மகிழுங்கள்.