Rettaikili

site-logo
  • Rettaikili
  • Products
  • Rice Varieties
  • Recipes
    • Cook with Rettaikili
    • Feast Delights
  • Blog
  • Contact
Enquiry
Uncategorized

உலகின் முதல் தானியம் நெல்லின் வரலாறு

June 2, 2022 ,
by rettaikili ,
நெல் லின் வரலாறு

நெல் என்பது புல்வகையை சேர்ந்த மனிதர்கள் அல்லது விலங்குகள் அறுவடை செய்து உண்ணக்கூடிய சிறிய விதை ஆகும். இத்தகைய சிறுவிதைகள் தானியங்கள் என்றழைக்கப்படுகின்றன.

தானியம்என்றால்என்ன? 

தானியங்கள் என்பவை புல் தாவரங்களின், பழங்கள் ஆகும். இவை மனிதர்கள் மற்றும் விலங்கு பறவைகள் உன்ன உகந்தவையாக இருக்கும்.  உலகின் தானியங்களில் பாதியை மக்கள் நேரடியாக அப்படியே உண்ணும் படி இருக்கின்றன.


நெல்என்றால்என்ன?


நெல் என்பது ஈரநிலங்களில் வளரக்கூடிய ஓர் ஆண்டு பயிர் ஆகும். இது ஏறக்குறைய ஐந்து மாதங்கள் வளரும். நன்கு முற்றிய நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு சேகரிக்கப்படும். உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் ஒன்றான நெல் பில்லியன்கணக்கான மக்களுக்கு உணவாக விளங்குகிறது.  உலக மக்கள் தொகையில் பெரும் பகுதி உணவு தானியமான இது உலகம் முழுவதும் 1000 வகைகளை உள்ளடக்கியது.


நெல்லின்பகுதிகள்:


உமி : 

ஜீரணிக்க முடியாத மேல் ஓடு. இது சிலிக்கா மற்றும் நார்சத்து நிறைந்தது.


தவிடு :

உணவாக பயன்படக்கூடிய வெளிப்புற தோல்.  இது வைட்டமின்கள், எண்ணெய்கள், தாதுக்கள், மற்றும் புரதம் நிறைந்தது.


எண்டோஸ்பெர்ம் :

வெண்மையான உட்புற அடுக்கு. இது மாவுச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது.
உமிநீக்கப்பட்ட நெல்,  அரிசி என்றழைக்கப்படுகிறது.


நெல்வளர்ந்தகதை :


நெல்லானது 5000 ஆண்டுகளுக்கு முன்பே பயிரிடப்பட்ட ஒரு தானியமாகும். இன்று இது உலக மக்களின் பிரதான உணவாக உள்ளது. ஆப்பிரிக்கா நெல், ஆசிய நெல் என இரு நெல் வகைகள் அறியப்படுகின்றன. 


இந்தியாவில் நெல் சாகுபடி:


நெல்லானது இந்தியாவின் பண்டைய நாகரிகங்களின் அடிப்படையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. கங்கை நதியின் பள்ளத்தாக்கில் கிமு 6500 இல் அரிசி பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைக்கப்பெறுகின்றன. கடந்த ஆயிரம் ஆண்டுகளில், இந்தியாவில் மட்டும் சுமார்  1,10,000  அரிசி வகைகள் உருவாகியுள்ளன. தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்,  நெல்சாகுபடிதென்- மத்திய சீனாவில்,  யாங்ஸ்டே ஆற்றின் குறுக்கே தொடங்கி, அங்கிருந்து தெற்கே மற்றும் வட கிழக்கு கொரியா மற்றும் ஜப்பான் நோக்கி பரவியது என்று வாதிடுகின்றனர்.  இந்தியாவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கங்கை நதி பள்ளத்தாக்கில் நெல்சாகுபடி தொடங்கியது என்று வாதிடுகின்றனர். பண்டைய இந்தியாவில் அரிசியின் ஆரம்ப வளர்ப்பு செயல்முறை ஒரிசா நிவாரா என்ற காட்டு இனத்தைச் சார்ந்தது. இது உள்ளூர் ஓரிசா இண்டிகா இன் ‘ஈரநிலம்’ மற்றும் ‘உலர்நில’ விவசாயத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. கிமு 2000 இல்’ஈரநில’ அரிசி ஓரிசாஜபோனிகா பயிர் செய்யப்பட்டது.


தமிழ்நாட்டில்நெல்சாகுபடிமுறை:

தமிழ்நாட்டில் நெல் பயிரடப்பட்ட தற்கான குறிப்புக்கள் பல சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது .


விதைநெல்தேர்ந்தெடுத்தல்:


பொதுவாக முந்தைய பருவத்தில் விதைக்கென ஒதுக்கப்பட்ட நெல் விதை நெல்லாக அடுத்த பருவத்தில் பயன்படுகிறது. இல்லையெனில் ,விதை நெல் வாங்கப்படுகிறது. நிலத்தில் நல்ல வளர்ந்த பகுதி விதை நெல்லாக குறிக்கப்பட்டு பின் அது கையால் போரடிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டதாக இருக்கும்.


விதைநெல்பாதுகாத்தல்:


நொச்சிதழை, வேப்பம்தழை கொண்ட பானையில் விதை நெல் பாதுகாப்பாக வைக்கபடும் .இவ்விலைகள் பூச்சி தாக்குதலை தடுக்கும்.

நெல்விதைத்தல்:

நீரின் அளவை பொறுத்து நெல் நேரடியாக நெல் விதைகளை நிலத்தில் தூவுதல் மற்றும் நாற்று நடுதல் எனும் இரு முறைகளில் விதைக்கப்படுகிறது நெல் வளர்ப்பு மிக நீண்ட வரலாறு கொண்டது . அது விளையும் விதத்திலும், மக்கள் உட்கொள்ளும் விதத்திலும், பெருமைக்குரிய வகையில் வேறுபட்டது.

Comments (1)

    Devaraj says: Reply
    August 23rd 2022, 7:51 am

    Nice Article thanks Rettaikili

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • How to cook dinner for Christmas eve
  • Effective Remedies based on Ponni Boiled rice
  • The Most Innovative Recipes with Leftover Rice
  • How can rice be your best friend?
  • அரிசியின் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

Recent Comments

  • where google translate on RajabogamPonni Rice – a boon or bane ?
  • Devaraj on உலகின் முதல் தானியம் நெல்லின் வரலாறு
  • Aegean College on RajabogamPonni Rice – a boon or bane ?

Rettaikili

Products

Rice varieties

Gallery

Cook with Rettaikili

Feast Delights

Contact us

Enquiry

    Blogs

    Terms & Conditions

    Privacy Policy

Rettaikili logo
Facebook-f Twitter Instagram Linkedin

Copyright © 2022 Rettaikili, All rights reserved.

WhatsApp us