மாங்காய் சாதம்
கோடைகாலத்தில் கிடைக்கும் மாங்காயை கொண்டு புளிப்பான மற்றும் சுவையான மாங்காய் சாதத்தை செய்து பாருங்கள்.
- Prep Time: 10 minutes
- Cook Time: 10 minutes
- Total Time: 20 minutes
- Yield: மாங்காய்சாதம்
Ingredients
- இரட்டைக்கிளி கோலம்பொன்னிஅரிசிசாதம்- 2 கப்
- மாங்காய் – 1 கப் (துருவியது)
- எண்ணெய்–3 மேசைக்கரண்டி
- வேர்க்கடலை–¼ கப்
- பச்சைமிளகாய் – 3 (நறுக்கியது )
- காய்ந்தமிளகாய் – 4
- இஞ்சி – சிறிதளவு (துருவியது)
- பெருங்காயம் : 1 சிட்டிகை
- மஞ்சள்தூள் : : 1 சிட்டிகை
- கருவேப்பிலை : 1 கொத்து
- கடுகு, உளுத்தம்பருப்பு : 1 தேக்கரண்டி
- கடலைபருப்பு :1 தேக்கரண்டி
- உப்பு–தேவைக்கேற்ப
Instructions
படி1 :இரட்டைகிளி கோலம் பொன்னி அரிசியில் வடித்த சாதத்தை 2 கப் எடுத்துக்கொள்ளவும்.
படி2 :வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
படி3 :எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை , கடலைபருப்பு, வேர்க்கடலை சேர்த்து தாளிக்கவும்.
படி 5: பின்னர் பச்சைமிளகாய் , காய்ந்தமிளகாய், துருவிய இஞ்சி,மஞ்சள்தூள் போட்டு வதக்கி ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.
படி 6: இப்போது துருவிய மாங்காய் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி சுமார் 3 நிமிடத்திற்கு வேகவிடவும்.
படி 7 : மாங்காய் நன்கு வெந்த பிறகு ,அதில் 2 கப் இரட்டைகிளி கோலம் பொன்னி சாதத்தை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
படி 8 : இரட்டை கிளி கோலம் பொன்னியில் செய்த மாங்காய் சாதத்தை குடும்பத்தினருக்கு சூடாக பரிமாறவும் .