Navratan pulao
- Prep Time: 10minutes
- Cook Time: 20minutes
- Total Time: 30 minutes
Ingredients
- நெய் – 2 டே.ஸ்பூன்
- முந்திரி – 10
- பாதாம் – 10
- திராட்சை/கிஸ்மிஸ் – 15-20
- பட்டை – 1துண்டு
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 2
- சீரகம் – 1/2ஸ்பூன்
- பன்னீர் – 100கிராம்
- பச்சை பட்டாணி – 1/4கப்
- கேரட் – 2
- பீன்ஸ் – 6
- மீல்மேக்கர் -1/4 கப்
- உருளைக்கிழங்கு – 2
- பாசுமதி அரிசி – 1 1/2கப்
- உப்பு – தேவைக்கு
- மிளகு தூள் – 1ஸ்பூன்
Instructions
படி 1 பாசுமதி அரிசியில் உதிரியாக சாதம் வடித்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வானலியில் சிறிது நெய் சேர்த்து அதில் முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
படி 2 பின் மீதம் உள்ள நெய்யில் பன்னீரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
படி 3 பின்னர் வானலியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றை தாளித்து அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ்,மீல்மேக்கர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக சுருளும் வரை வதக்கவும்.
படி 4 காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அதில் வடித்து வைத்துள்ள சாதம் தேவையான அளவு உப்பு, மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் வதக்கி வைத்துள்ள நட்ஸ் மற்றும் ஏனைய காய்கறிகளை சேர்த்து கிளறி பரிமாறவும்.