படி1 : இரட்டை கிளி சோனா மசூரி அரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு சாதம் வடித்து எடுத்துக்கொள்ளவும்.
படி2 : துவரம் பருப்பை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். வேர்க்கடலை அவித்து எடுத்துக் கொள்ளவும்
படி3 : வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
படி4 : எண்ணெய் சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
படி 5: பின்னர் தக்காளி , உருளைக்கிழங்கு, பீன்ஸ் , பச்சைபட்டாணி சேர்த்து வதக்கி சிறுது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.
படி 6: 5 நிமிடத்திற்கு பிறகு வெல்லம் ,பிசிபெலேபாத் போடி , புளி கரைசல் ஆகியவற்றை காய்கறிகளுடன் சேர்த்து வதக்கவும்
படி 7 : இப்போது மசித்த பருப்பு ,சாதம் , வேக வைத்த வேர்க்கடலை ஆகியவற்றை வாணலியில் சேர்க்க தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடத்திற்கு வேகவைக்கவும்.
படி 8: தாளிப்பு வாணலியில் நெய் உருக்கி கடுகு உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை , காய்ந்தமிளகாய்,முந்திரிபருப்பு , ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
படி9 : இந்த தாளிப்பை பிசிபெலேபாத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
படி 10: இரட்டைக்கிளி சோனாமசூரியில் செய்த சுவையான பிசிபெலேபாத் தயார்.