CategoriesRettaikili

“மருதம்: தமிழக விவசாய வரலாறு”

Former

தமிழகவரலாற்றில் மருதம் ஒரு முக்கிய வாரியாக அமைந்துள்ளது. இது தமிழ் பாரம்பரியத்தின் முக்கிய தொழிலாக இருந்து வந்துள்ளது. தமிழகம் என்று குறிப்பிடப்படுவது சங்ககாலத்தின் தமிழகம் என்று அழைக்கப்பட்டது.

பண்டைய தமிழகத்தில் உழவு

தமிழகத்தின் முக்கியஆறுகள் பாலாறு, பென்னாறு (தெற்கு), காவேரி மற்றும் வைகை. தாமிரபரணி ஒரு பழமையான மற்றும் புனிதமான நதி வற்றாத ஆறு. தமிழில் விவசாயத்தின் முக்கியத்துவம் நன்கு அங்கீகரிக்கப்பட்டது. 1900 அலெக்சாண்டர் ரியா என்பார் ஆராய்ச்சி செய்த ஆதிச்ச நல்லூரில் ஏராளமான பானைகளில் அரிசியும் தினையும் உமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் சரியான நெல்சாகுபடி செய்து வந்ததற்கான சாட்சிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

உழவை போற்றும் திருக்குறள்

திருவள்ளுவர் உழவுக்கென தனி அதிகாரம் படைத்து 10 குறள்களில் உழவின் பெருமையை கூறியுள்ளார்.

சுழன்றும்ஏர்ப்பின்னதுஉலகம்அதனால்

உழந்தும்உழவேதலை.

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த்தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத்தொழிலே சிறந்தது என்று இக்குறளை மு.வரதராசனார் விவரித்துள்ளார்.

தமிழ் நிலத்தின் வகைப்பாடு

ஆதி தமிழர்கள் சுற்றுசூழல் புவியியல் பகுதிகளை ஐந்து வகைகளாக பிரித்து அவற்றை திணை என்றழைத்தனர்.

தொல்காப்பியத்தில் நிலத்தின் தன்மை மற்றும் காலநிலை பொறுத்து நான்கு வகையாக பிரித்துள்ளனர். காஉறைஉலகம் (காடுகள் ) , மைவரைஉலகம் (மலைகள் ) திருப்புனல்உலகம் (வயல் ) மற்றும் பெருமாள்உலகம் (மணல்பகுதிகள் ).

அதே வேலையில், சூழலியல் பிரிவுகள் ஐந்திணைகளாக பகுக்கப்பட்டுள்ளன. குறிஞ்சி(மலைகள் ), முல்லை (காடுகள் ), மருதம் (வயல்கள் ), நெய்தல் (கடல்பகுதிகள் ) பாலை (வறண்ட அல்லது வறண்ட அல்லது பாலை வனப்பாதை). பாலை தனி திணையாக அங்கீகரிக்கப்படவில்லை.

மூவேந்தர்களில் பாண்டியர்கள் வசம் ஐந்திணைகளும் இருந்து வந்துள்ளது .ஆனால் சேரர்கள் குறிஞ்சியையும் ,சோழர்கள் மருதத்தையும் மட்டுமே கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மருதத்திணையில் உழவு

மருதம்மரத்துடன் அடையாளம் கொல்லப்பட்ட விவசாய பகுதி மருதத்திணை என்றழைக்கப்பட்டது .இந்த பகுதியில் தண்ணீர் அதிக அளவில் உள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் உழவர் ,உழுமகன், வேளாண்குடி , கம்மார் , தொழுவர் என்றழைக்கப்பட்டனர் . அவர்களின் முக்கிய விவசாயத்திற்கு தொடர்புடைய விதைத்தல், கலையெடுத்தல் ,அறுவடைசெய்தல் ஆகியவை இவர்களது முதன்மையான பணிகள் . எருது சண்டை இவர்களின் பொழுது போக்கு.

மருதத்தில் நெல்சாகுபடி

நெல் முக்கிய பயிராக இருந்து வந்துள்ளது. வெண்நெல் ,செந்நெல் , பொன்நெல் என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது. இதில் செந்நெல் விலை உயர்ந்தது.

இவ்வாறாக சேரர்கள், சோழர்கள் பாண்டியர்களின் விவசாயபகுதிகள் வளமான நதி அருகிலேயே அமைத்திருந்தது என்பது இலக்கியங்கள் மூலம் நாம் அறிகிறோம் . இந்த காலத்தில் இருக்கும் விவசாயமுறைகள் பண்டையகாலத்தின் அறிவு புலமை என்றால் அது மிகையாகாது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன