CategoriesRettaikili

ஆரோக்கிய அரிசி வகைகள்: சுவையும் ஆரோக்கியமும்

Red Rice

தொல்பொருள் ஆய்வின் மூலம் அரிசியானது மனிதனின் உணவாக இருந்து வந்தது

தெரியவருகிறது. இத்தகைய பாரம்பரியமான அரிசி இன்றளவும் நமது உணவு முறையில்

நீங்கா இடம் பெற்றுள்ளது

மனிதனின் தினசரி உணவாக இருக்கும் அரிசி பண்டைய காலம் தொட்டே மக்களின்

பசியை போக்கிய ஒரு அறிய தானியமாகும். இந்திய கலாச்சாரம் அரிசியுடன் நெருங்கிய

தொடர்புடையது. பல்வேறு வகையான அரிசி வகைகள் நம்முடைய முன்னோர்களால்

உண்ணப்பட்டு வந்தது. அவற்றில் பெரும்பான்மையான அரிசிவகைகள் தற்போது

பயன்பாட்டில் இல்லை. 

வெள்ளை அரிசியும் நாமும்

நாம் இப்போது பயன்படுத்தும் பெரும்பாலான அரிசிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். நாம்

இந்த வெள்ளை அரிசிகளை நமது அன்றாட உணவு தேவையை தவிர்த்து விருந்து

உணவுகளிலும் நீங்கா இடம் பெறுகிறது. 

அன்றாட பயன்பாட்டில் அரிசி

நாம் தினசரி பயன்படுத்தும் அரிசிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

பொன்னி:

தமிழ் இலக்கியத்தில் காவிரிநதி ‘பொன்னி’ என்று அழைக்கப்படுகிறது. பொன்னி அரிசி

1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது. 

இந்த நெல் ரகம் காவிரி டெல்டாவில் சிறந்த முறையில் பயிரிடப்படுகிறது, இருப்பினும் எந்த

நிலத்திலும் உயர்தர நீரைக் கொண்டு பயிரிடலாம். பொன்னி அதன் குறிப்பிட்ட

குணங்களால் நமது இதயங்களில் ஒரு அசாதாரண இடத்தைப் பிடித்துள்ளது .பொன்னி

என்ற சொல் தமிழில்  ‘தங்கம்’ என்பதைக் குறிக்கிறது.பொன்னி அரிசி மேலும் ராஜபோகம்

பொன்னி , கிச்சிடி பொன்னி,  கோலம் பொன்னி போன்று பல்வேறு பெயர்களில்

கிடைக்கிறது . ஒரு வகை பொன்னி மற்றொரு வகைக்கு எள்ளளவும்

குறைவுபட்டது அல்ல.

சீரகசம்பா:

சீரகத்தை ஒத்த அமைப்பை கொண்ட சிரிய வகை அரிசி வகை சம்பா பருவத்தில்  (ஆகஸ்ட்–

ஜனவரி )பயிரிடப்படுவதால் சீரக சம்பா என்றானது. மிக பழமையான வரலாற்றை

கொண்ட இந்த தமிழ்நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று. அதிக சத்துக்கள்

நிறைந்த சீரக சம்பா பிரியாணி செய்ய ஏற்றது.

சோனாமசூரி :

சோனாமசூரி தென்னகத்தை பூர்வீகமாக கொண்ட நல்ல மணமான நடுத்தர நீளம்

கொண்ட ஒரு அரிசி வகையாகும். இதன் மணம் மற்றும் சுவை எல்லா வகையான உணவு

வகைகள் தயாரிக்கவும் ஏற்றதாயிருக்கிறது ..”தென்னகத்தின்முத்து” என்ற சிறப்பு பெயரும்

இந்த அரிசி பெறுகிறது.

பாஸ்மதிஅரிசி

நீளமான இரட்டைக்கிளி பாசுமதி அரிசி ஒரு புதுமையான நறுமணத்துடன் நிபுணத்துவம்

பெற்ற விவசாயிகளிடம் இருந்து கவனமாக வளர்க்கப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. 

முழுமையான வளர்ச்சி பெற்ற பாஸ்மதி அரிசி நன்கு பதப்படுத்தப்பட்டு சந்தைக்கு

விற்பனைக்காக வருகிறது.  இந்த பஞ்சு போன்ற, நறுமணம் மற்றும் மென்மையான சுவை

கொண்ட பாஸ்மதி அரிசி உங்களின் உணவினை மேம்படுத்தும்.

அரிசி நமது அன்றாட வாழ்வின் இன்றியமையாத ஒரு பொருள் ஆகும் .நல்ல அரிசியை

தேர்ந்தெடுத்து வாழ்வை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு நாம் முற்பட வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன