படி 1 பாசுமதி அரிசியில் உதிரியாக சாதம் வடித்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வானலியில் சிறிது நெய் சேர்த்து அதில் முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
படி 2 பின் மீதம் உள்ள நெய்யில் பன்னீரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
படி 3 பின்னர் வானலியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றை தாளித்து அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ்,மீல்மேக்கர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக சுருளும் வரை வதக்கவும்.
படி 4 காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அதில் வடித்து வைத்துள்ள சாதம் தேவையான அளவு உப்பு, மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் வதக்கி வைத்துள்ள நட்ஸ் மற்றும் ஏனைய காய்கறிகளை சேர்த்து கிளறி பரிமாறவும்.
Find it online: https://rettaikili.in/navratan-pulao/