Print

பன்னீர் பிரியாணி

Paneer-Briyani

Ingredients

Scale
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 பிரியாணி இலை, 1 இலவங்கப்பட்டை, 3 ஏலக்காய், 3 கிராம்பு
  • 1 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கைப்பிடி புதினா இலைகள்
  • 1/8 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/4 கப் தயிர்
  • 200 கிராம் பனீர்
  • 1 கப் பாசுமதி அரிசி (200 கிராம்)
  • தேவையான உப்பு

Instructions

1. ஒரு  மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

2. அடுத்து அதே ஜாரில் கிராம்பு, ஏலக்காய், மிளகு மற்றும் பட்டை சேர்த்து நன்கு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

3. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

4. அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

5. பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.

6. தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், பிரியாணி இலை, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்த மசாலா பொடியை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்.

7. கழுவி வைத்துள்ள பாசுமதி அரிசியையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கி பின் அதில் 3 கப் நீரை ஊற்றி, பன்னீர் துண்டுகளைப் போட்டு, தேவையான உப்பு தூவி கிளறி, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும், குறைவான தீயில் 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

8. விசில் போனதும் குக்கரைத் திறந்து, ஒரு முறை கிளறி விட்டால், சுவையான பன்னீர் பிரியாணி தயார்.