CategoriesRettaikili

“தமிழ் புத்தாண்டு – அறுசுவை விழாக்கள்!”

Tamil New Year

தமிழ்புத்தாண்டு :

தமிழ்புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம்தேதி கொண்டடப்படுகிறது. இது நாட்காட்டியில் சித்திரை மாதத்தின் முதல்நாள். இது தமிழ் வருடபிறப்பு அல்லது சித்திரை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள் இன்று முதல் புதிய தமிழ்பஞ்சாங்கத்தை பயன்படுத்துகின்றனர். விடியும் முன்எழுந்து, தலைகுளித்து, மாகோலம் இட்டு சாமிகும்பிட்டு இப்படியாக தொடங்கும் இந்த சித்திரைப் பெருநாள் வாழ்வை சிறப்பாக மாற்ற அறுசுவை உணவு சமைத்து குடும்பத்தோடு கூடிஉண்டு பொழுது சாய்வதாய் முடிவுக்கு வருகிறது.

ஏன் சித்திரை முதல் நாள் புத்தாண்டு ?

சித்திரைமாதத்தில் மாமரமும் வேப்பமரமும் பூத்து காய்த்து குலுங்கும். இது இனிப்பும் கசப்பும் நிறைந்த வாழக்கையை குறிப்பால் உணர்த்துவதாய் அமைவதால் சித்திரை முதல் நாளை புது ஆண்டின் தொடக்கமாக விழா எடுக்கிறோம்.

அறுசுவை உணவு என்பது யாது ?

நம் முன்னோர்கள் பண்டைய காலம் தொட்டே துவர்ப்பு ,காரம் ,இனிப்பு ,புளிப்பு ,உவர்ப்பு, கசப்பு ஆகிய சுவைகள் அடங்கிய அறுசுவை உணவை உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அறுசுவை உணவென்பது நமது பகட்டை வெளிப்படுத்த உண்ணப்படுவது அல்ல, மாறாக நமது உடலை வலுப்படுத்த உண்ணப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் அறுசுவை உணவை தினமும் உண்பதென்பது அவ்வளவு எளிதல்ல. எனினும் தமிழ்புத்தாண்டு போன்ற சிறப்பான விழாநாட்களில் அறுசுவை உணவை உண்பது மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் வித்திடுகிறது.

அறுசுவையும் உடல்நலமும் :

காரம் :

உணர்ச்சிகள் அதிகரிக்க எனினும் அளவுக்கதிகமானால் உடல்சூடு அதிகரிக்கும்.

கசப்பு :

உடலில் உள்ள நச்சுகிருமிகளை அழிக்க உதவுகிறது

இனிப்பு :

தசைகளுக்கு வலுவளிக்கிறது .எனினும் அதிக இனிப்புவாதத்தை உண்டாக்கலாம்.

புளிப்பு

இரத்தகுழாயில் உள்ள அடைப்புகளை நீக்க உதவுகிறது.

துவர்ப்பு :

இரத்தம் உறைவதை அதிகப்படுத்தும்.

உவர்ப்பு :

நியாபகசக்தியை அதிகரிக்கும் எனினும் அதிக உவர்ப்பு உடலில் வீக்கத்தை உருவாக்கும்.

மாங்காய்பச்சடியும் அறுசுவைகளும்

மாங்காய்பச்சடி தமிழ்புத்தாண்டன்று செய்யப்படும் ஒரு இன்றியமையாத உணவாகும் .இந்த பச்சடியில் துவர்ப்பு ,காரம் ,இனிப்பு ,புளிப்பு ,உவர்ப்பு, கசப்பு ஆகிய அறுசுவைகளும் இருக்கும். இனிப்புக்கு வெல்லம், உவர்ப்புக்கு உப்பு, காரத்திற்கு மிளகாய்,கசப்புக்கு வேப்பம்பூ, புளிக்கு மாங்காய், துவர்ப்புக்கு மஞ்சளைப் பயன்படுத்தி மாங்காய் பச்சடி தயாரித்து பரிமாறப்படுகிற்து. வாழ்க்கை என்பது நன்மை ,தீமை ,இன்பம், துன்பம் ,வெற்றி ,தோல்வி ஆகியவற்றின் கலவையே என்பதை இது உணர்த்துகிறது.

ராஜபோகம் பொன்னி அரிசியில் சோறாக்கி ,ஆரோக்கியமான காய்கறிகள் கொண்டு குழம்பு செய்து வேப்பம்பூரசம் கூட்டி மாங்காய்பச்சடி வைத்து பரிமாற இனிதே தொடங்கும் தமிழ்புத்தாண்டு

அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *