பிசிபெலேபாத்
- Prep Time: 10 minutes
- Cook Time: 20 minutes
- Total Time: 30 minutes
- Yield: பிசிபெலேபாத்
Ingredients
- இரட்டைக்கிளி சோனாமசூரிஅரிசி- 1கப்
- துவரம்பருப்பு– 1/4கப்
- வேர்க்கடலை –3 மேசைக்கரண்டி
- எண்ணெய்–2மேசைக்கரண்டி
- புளிகரைசல்- 1மேசைக்கரண்டி
- சின்னவெங்காயம் – 5 நறுக்கியது
- தக்காளி– 1நறுக்கியது
- கேரட்– 1 நறுக்கியது
- பச்சைபட்டாணி – ½ கப்
- உருளைக்கிழங்கு – 1 நறுக்கியது
- பீன்ஸ் – ½ கப்
- வெல்லம்– 2 தேக்கரண்டி
- பிசிபெலேபாத்பொடி – 3 மேசைக்கரண்டி
- பெருங்காயம் : 1 சிட்டிகை
- காய்ந்தமிளகாய் – 4
- நெய் -3 மேசைக்கரண்டி
- முந்திரிபருப்பு-10
- மஞ்சள்தூள் : : 1 சிட்டிகை
- கருவேப்பிலை : 1 கொத்து
- கடுகு, உளுத்தம்பருப்பு : 1 தேக்கரண்டி
- கடலைபருப்பு :1 தேக்கரண்டி
- உப்பு–தேவைக்கேற்ப
- தண்ணீர் –தேவைக்கேற்ப
Instructions
படி1 : இரட்டை கிளி சோனா மசூரி அரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு சாதம் வடித்து எடுத்துக்கொள்ளவும்.
படி2 : துவரம் பருப்பை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். வேர்க்கடலை அவித்து எடுத்துக் கொள்ளவும்
படி3 : வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
படி4 : எண்ணெய் சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
படி 5: பின்னர் தக்காளி , உருளைக்கிழங்கு, பீன்ஸ் , பச்சைபட்டாணி சேர்த்து வதக்கி சிறுது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.
படி 6: 5 நிமிடத்திற்கு பிறகு வெல்லம் ,பிசிபெலேபாத் போடி , புளி கரைசல் ஆகியவற்றை காய்கறிகளுடன் சேர்த்து வதக்கவும்
படி 7 : இப்போது மசித்த பருப்பு ,சாதம் , வேக வைத்த வேர்க்கடலை ஆகியவற்றை வாணலியில் சேர்க்க தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடத்திற்கு வேகவைக்கவும்.
படி 8: தாளிப்பு வாணலியில் நெய் உருக்கி கடுகு உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை , காய்ந்தமிளகாய்,முந்திரிபருப்பு , ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
படி9 : இந்த தாளிப்பை பிசிபெலேபாத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
படி 10: இரட்டைக்கிளி சோனாமசூரியில் செய்த சுவையான பிசிபெலேபாத் தயார்.