Print

பிசிபெலேபாத்

  • Author: Rettai Kili
  • Prep Time: 10 minutes
  • Cook Time: 20 minutes
  • Total Time: 30 minutes
  • Yield: பிசிபெலேபாத்

Ingredients

  • இரட்டைக்கிளி சோனாமசூரிஅரிசி- 1கப்
  • துவரம்பருப்பு– 1/4கப்
  • வேர்க்கடலை –3 மேசைக்கரண்டி
  • எண்ணெய்–2மேசைக்கரண்டி
  • புளிகரைசல்- 1மேசைக்கரண்டி
  • சின்னவெங்காயம் – 5 நறுக்கியது
  • தக்காளி– 1நறுக்கியது
  • கேரட்– 1 நறுக்கியது
  • பச்சைபட்டாணி – ½ கப்
  • உருளைக்கிழங்கு – 1 நறுக்கியது
  • பீன்ஸ் –  ½ கப்
  • வெல்லம்– 2 தேக்கரண்டி
  • பிசிபெலேபாத்பொடி – 3 மேசைக்கரண்டி
  • பெருங்காயம் : 1  சிட்டிகை
  • காய்ந்தமிளகாய் – 4
  • நெய் -3 மேசைக்கரண்டி
  • முந்திரிபருப்பு-10
  • மஞ்சள்தூள் : : 1  சிட்டிகை
  • கருவேப்பிலை : 1 கொத்து
  • கடுகு, உளுத்தம்பருப்பு : 1 தேக்கரண்டி
  • கடலைபருப்பு :1 தேக்கரண்டி
  • உப்பு–தேவைக்கேற்ப
  • தண்ணீர் –தேவைக்கேற்ப

Instructions

படி1 : இரட்டை கிளி சோனா மசூரி அரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு சாதம் வடித்து எடுத்துக்கொள்ளவும்.

படி2 : துவரம் பருப்பை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். வேர்க்கடலை அவித்து எடுத்துக் கொள்ளவும்

படி3 : வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.

படி4 : எண்ணெய் சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

படி 5: பின்னர் தக்காளி , உருளைக்கிழங்கு, பீன்ஸ் , பச்சைபட்டாணி சேர்த்து வதக்கி சிறுது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.

படி 6: 5 நிமிடத்திற்கு பிறகு வெல்லம் ,பிசிபெலேபாத் போடி , புளி கரைசல் ஆகியவற்றை காய்கறிகளுடன் சேர்த்து வதக்கவும்

படி  7 : இப்போது மசித்த பருப்பு ,சாதம் , வேக வைத்த வேர்க்கடலை ஆகியவற்றை வாணலியில் சேர்க்க தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடத்திற்கு வேகவைக்கவும்.

படி  8: தாளிப்பு வாணலியில் நெய் உருக்கி கடுகு உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை , காய்ந்தமிளகாய்,முந்திரிபருப்பு , ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

படி9 : இந்த தாளிப்பை பிசிபெலேபாத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

படி 10: இரட்டைக்கிளி சோனாமசூரியில் செய்த சுவையான பிசிபெலேபாத் தயார்.

 

Did you make this recipe?

Share a photo and tag us — we can’t wait to see what you’ve made!